14
Jun
சென்னை (ஜூன் 13, 2022): ஜீ5 தளம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் பிரீமியர் செய்ய திட்டமிடப்பட்டுள்ள தொடரான ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 இன் செய்தியாளர் சந்திப்பு, இன்று படக்குழுவினர் கலந்து கொள்ள இன்று இனிதே நடைபெற்றது. ஜீ5 தளம் தொடர்ந்து வெற்றிகரமான தொடர்களான விலங்கு, ஆனந்தம், கார்மேகம் என பல ஒரிஜினல் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த அதிரடி ஒரிஜினல் தொடரான ‘ஃபிங்கர்டிப்’ இன் இரண்டாவது சீசனை தற்போது அறிவித்துள்ளது. இந்த தொடரை அருண் மற்றும் ஜார்ஜ் நம்பி தயாரித்துள்ளனர், சிவகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, வினோத் கிஷன், கண்ணா ரவி, ஷரத் ரவி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஜூன் 17, 2022 அன்று ‘ஃபிங்கர்டிப்’ சீசன் 2 வெளியாவதை ஒட்டி…