12
Aug
இன்றைய கோலிவுட் என்னும் ஆலமர விருட்சத்தின் ஆரம்பகாலமென்பது ஏ.வி.எம். ஸ்டுடியோவிலும் வளர்ந்தது,, அந்த ஏவிஎம்-மை உருவாக்கிய மெய்யப்ப செட்டியார் இந்த ஸ்டுடியோவை சென்னையில் தொடங்கி, பின் தேவகோட்டையில் சிறிது காலம் இயங்கி, மீண்டும் சென்னைக்கே வந்த கதை சுவாரஸ்யமானது. ஏ.வி.எம். நிறுவனத்தின் நிறுவனரான ஏ.வி.மெய்யப்பன் செட்டியார் புதுமையாக எதையாவது செய்து கொண்டே இருப்பார். அதற்காக முதலீடு செய்வதற்கும் தயங்காதவர். ஆரம்பகாலத்தில் காரைக்குடியில் 'ஏவி அண்டு சன்ஸ்' என்ற பெயரில் இசைத் தட்டுகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். அதை பெரிய அளவில் விரிவு படுத்தினார். 1932-ல் தென்னிந்தியா முழுவதற்கும் விற்பனை உரிமையைப் பெற்றார். சிறிய ஊரில் இருந்து பெரிதாக சிந்தித்தவர். அதன் பின் சென்னையில் சிவம் செட்டியார், நாராயண அயங்கார் என்ற இருவரை சேர்த்துக் கொண்டு 'சரஸ்வதி ஸ்டோர்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஜெர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஓடியன் கிராமபோன் கம்பெனியுடன் ஒப்பந்தம் ஒன்று செய்து வியாபாரத்தை…