தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி பொறுப்பேற்றுள்ளார்

தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் தலைவராக ஆர்.கே. செல்வமணி பொறுப்பேற்றுள்ளார்

தமிழ்த்திரையுலகில் மிக முக்கிய அங்கமான FEFSI, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட திரு ஆர்.கே. செல்வமணி அவர்களின் தலைமையில் கடந்த சில வருடங்களாக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் FEFSI-யின் ஊழியர்களின் நலனுக்காக அவர் எடுத்த பல முயற்சிகள் நம் பாராட்டுக்குரியவை. தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கங்களுடன் இணக்கமாக பல வருடங்களாக அவர் பணியாற்றி வருகிறார். 2022-ல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்களுக்கும் FEFSI-க்கும் ஏற்பட்ட புதிய சம்பளங்களின் ஒப்பந்தத்திற்கு மிக முக்கியமான காரணம் திரு. ஆர்.கே. செல்வமணி அவர்கள். அனைவரையும் ஒருங்கிணைத்து பயணிக்கும் ஆற்றல், ஆளுமை மற்றும் பல திறன்கள் கொண்ட திரு. ஆர்.கே. செல்வமணி அவர்கள் FEFSI-யின் தலைவராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை. திரு. ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து பயணிப்பதில் தமிழ்த்திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமிதம் கொள்கிறது. வாழ்த்துக்களுடன், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில், பாரதிராஜா தலைவராக உள்ளார் மற்றும் T.G. தியாகராஜன்,…
Read More
பெஃப்ஸி தொழிலாளர்களின் குடியிருப்பு திட்டத்திற்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை

பெஃப்ஸி தொழிலாளர்களின் குடியிருப்பு திட்டத்திற்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை

  ’விஜய் சேதுபதி போன்ற மனிதர்களால் தான் உலகம் தழைத்தோங்குகிறது’- ஆர்.கே.செல்வமணி ‘ஒரு கோடி மட்டுமல்ல...இன்னும் உதவுவேன்’ ஃபெப்ஸி விழாவில் விஜய் சேதுபதி திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பெஃப்ஸி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக மேன் கைண்ட் ( Man Kind) என்ற நிறுவனம் சார்பில் முப்பத்தியோரு லட்ச ரூபாய் நிதி உதவியாக பெஃப்ஸி சம்மேளனத்தின் வங்கி…
Read More