ஆக்டருங்க, டெக்னிஷியங்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைங்கப்பூ!- பாரதிராஜா!

ஆக்டருங்க, டெக்னிஷியங்கள் எல்லாம் சம்பளத்தைக் குறைங்கப்பூ!- பாரதிராஜா!

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்குக் காலம் முடிவடைந்து சினிமா ஷூட்டிங் தொடங்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் நடிகர்கள் தங்களின் 30% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. இன்று பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில்,“தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாகச் சமூக இடைவெளி கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணிசெய்யுங்கள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீளுதலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும்.   கொரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களைமுடித்து திரைக்கு கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை, அதற்கான…
Read More
கோலிவுட் போராட்டம் முடிவுக்கு வந்துடுச்சு!

கோலிவுட் போராட்டம் முடிவுக்கு வந்துடுச்சு!

கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் சினிமாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறும் பொருட்டு சென்னை கோட்டையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த , முத்தரப்பு பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்துள்ளதையடுத்து  இதர பணிகள் தொடங்க ஆயத்தமாகி வருவதாக தகவல் வருகிறது.. கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வந்தது. இந்தப் போராட்டம் டிஜிட்டல்கட்டணக் கொள்ளை மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக நடந்து வந்தது. இந்தப் போராட்டத்தால் மார்ச் 16 ஆம் தேதி முதல்தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன. மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல சினிமா தொழிலாளர்கள் வேலைஇழந்து பணக்கஷ்டத்தில் தவித்து வருகின்றனர். மேலும் பட படங்களை திரையிட முடியாமல் படக்குழுவினர் உள்ளனர். இந்த பிரச்சனையைதமிழக அரசு தான் தீர்க்க வேண்டும் என…
Read More