10
Dec
சென்னை, டிசம்பர் 09: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஃபால்’ இணைய தொடரினை வெளியிட்டுள்ளது. இத்தொடரில் நடிகை அஞ்சலி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடர் வெளியாவதற்கு முன்னதாக, டிசம்பர் 8ஆம் தேதி வியாழன் அன்று, இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தின் சிறப்புக் காட்சி ஊடகங்களுக்காக திரையிடப்பட்டது. 'ஃபால்' இணைய தொடரின் சிறப்பு திரையிடலுக்கு ஊடகவியலாளர்களை வரவேற்றுப் பேசிய ஹாட்ஸ்டார் தமிழ் - தலைமை நிர்வாகி கிருஷ்ணன் குட்டி கூறியதாவது.., "'ஃபால்' தொடரை உருவாக்கியதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், இதில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் நன்றி. ரசிகர்கள் விரும்பும் சிறந்த தமிழ் கதைகளை அனைவருக்கும் சேரும்படி தயாரிக்க வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். நாங்கள் இத்தொடரை 7 மொழிகளில் வெளியிடுகிறோம். திரையுலகில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும், இந்தத் தொடரின் இயக்குநருமான சித்தார்த் ராமசாமி கூறியதாவது, “நான் இயக்குநராக அறிமுகமாகும் தொடர் ‘ஃபால்’. நான் ஒளிப்பதிவாளராக…