சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். கார்த்தி பேசும்போது, ‘இப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நான் காலேஜ், பள்ளி விழாவிற்கு செல்கிறேன். அங்கு எல்லாம், சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது வசனம் பேசுவது என்று எல்லாரும் சினிமா நோக்கி போய் கொண்டு…