எங்கேயும் எப்போதும் கதானாயகருக்கு திருமணம் ! வெளியான புகைப்படங்கள்!

எங்கேயும் எப்போதும் கதானாயகருக்கு திருமணம் ! வெளியான புகைப்படங்கள்!

எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து இருப்பவர் சர்வானந்த். 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தது இவர்தான். அவருக்கும் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுக்கும் கடந்த பல மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் தேதி பல மாதங்களாக அறிவிக்கப்படாததால் திருமணம் நின்றுவிட்டது என்று செய்தி பரவியது. அதை மறுத்த நடிகரின் குடும்பத்தினர் சில வாரங்களுக்கு முன்பு தேதியை அறிவித்தனர். மேலும் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சர்வானந்த் சாலை விபத்தில் சிக்கிக்கொண்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அவர் விபத்தில் இருந்து காயம் அடையாமல் தப்பினார். இந்நிலையில் இன்று சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Read More