சூர்யாவின் 43வது பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது! மீண்டும் சூரரை போற்று கூட்டணி !

சூர்யாவின் 43வது பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது! மீண்டும் சூரரை போற்று கூட்டணி !

  சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் 'சூரரைப் போற்று' திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். 'சூரரைப் போற்று' படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற கூட்டணி மீண்டும் 'சூர்யா 43' படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே சூர்யாவின்…
Read More
இந்திய சினிமாவின் முண்ணனி பிரபலங்கள் வெளியிட்ட துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’ பட முன்னோட்டம்!

இந்திய சினிமாவின் முண்ணனி பிரபலங்கள் வெளியிட்ட துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’ பட முன்னோட்டம்!

  Zee Studios & Wayfarer Films பெருமையுடன் வழங்கும் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில், “கிங் ஆஃப் கொத்தா” திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் டிரெய்லரை இந்திய சினிமாவின் ஜாம்பவான்கள் ஷாருக்கான், மோகன்லால், சூர்யா, நாகார்ஜுனா ஆகியோர் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டனர். முன்னணி நட்சத்திர நாயகன் துல்கர் சல்மான் நடிப்பில் அதிகாரம், லட்சியம் மற்றும் வஞ்சகம் நிரம்பிய சாம்ராஜ்யத்திற்கு கொண்டு செல்லும் இந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம், ஓணம் பண்டிகை கொண்டாட்டமாகப் ஆகஸ்ட் 24, 2023 அன்று பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது. 'கிங் ஆஃப் கொத்தா' உலகம் வித்தியாசமானது, விசுவாசம் ஒரு அபாயகரமான சூதாட்டமாகவும், அரியணைக்கான பந்தயம் இடைவிடாத முயற்சியாகவும் இருக்கும் இந்த உலகில் கோதாவிற்கு ராஜாவாகும் ஒரு கவர்ச்சியான கதையை இப்படம் சொல்கிறது. ஆதிக்கத்தை நிலைநாட்டும் முயற்சியில் ஒரு வல்லமை மிக்க போட்டியாளராக துல்கர் சல்மான் முதன்மை வேடத்தில் பிரகாசிக்கிறார், புதிதாக வெளியிடப்பட்ட…
Read More
ரத்தம் தெரிக்க தெரிக்க வெளியான துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கோதா” டீசர்!

ரத்தம் தெரிக்க தெரிக்க வெளியான துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கோதா” டீசர்!

Zee Studios மற்றும் Wayfarer Films இணைந்து வழங்கும், மெகா ஸ்டார் துல்கர் சல்மான் நடிப்பில் “கிங் ஆஃப் கோதா” திரைப்படத்தின் பரபரக்க வைக்கும், அட்டகாசமான டீசர் வெளியானது ! Zee Studios மற்றும் Wayfarer Films' வழங்கும் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இறுதியாக தற்போது இப்படத்தின் இரத்தம் தெறிக்கும், அதிரடியான டீசரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். டீசரில் கோதா மக்கள் அரசனைக் காண்பது போல் மொத்தமாக ஒதுங்கி துல்கர் சல்மான் காருக்கு வழி விடுகின்றனர். ஸ்டைலான பழம்பெருமை மிகுந்த மெர்சிடிஸ் காரில் 'தி கிங்' (துல்கர் சல்மான்)  வருவதைப் பார்க்கும்போது,  நம் மொத்த கவனமும் அவர் மேல் குவிகிறது. மன்னிக்கத் தெரியாத வன்முறையாளனாக, இரக்கமற்ற கொடூரனாக வசீகரிக்கும் தோற்றத்தில் மிரட்டுகிறார் துல்கர் சல்மான். 'கிங் ஆஃப் கோதா' டீசர் கோதா மக்களின் வாழ்க்கையை காணும்…
Read More