போதை பொருள் கொண்டாட்டத்தில் ஷாருக் கான் மகன்!

போதை பொருள் கொண்டாட்டத்தில் ஷாருக் கான் மகன்!

நடிகர் ஷாருகான் மகன் ஆர்யன் கான் தனது நண்பர்களுடன் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை பொருட்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மும்பையில் இருந்து கோவா செல்ல உள்ள கப்பலில் போதை பொருள் விருந்து பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், என்சிபி குழு, அதன் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான போலீசார், நேற்று மும்பை கடற்கரையில் கப்பலில் நடந்த பார்ட்டி ஒன்றை சோதனை செய்தனர். இதுகுறித்து என்சிபி தெரிவித்துள்ள சமீபத்திய தகவலின்படி, பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில் பார்ட்டியில் நேற்று நடைபெற்ற பொது சோதனையில் 3 பெண்கள் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Read More