01
Feb
ஜனரஞ்சக திரைப்படங்களை இயக்குவதில் திறமை வாய்ந்தவர் சுந்தர் சி . சமீபத்தில் இவர் இயக்கிய அரண்மனை3 திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது .அரண்மனை3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கம் புதிய படத்தை அவ்னி சினி மேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் பென்ஸ் மீடியா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்கள் .அவ்னி சினி மேக்ஸ் தயாரிக்கும் 6வது படமான இத்திரைப்படத்தில் ஜீவா, ஜெய் ,ஸ்ரீகாந்த் ஆகியோர்கள் கதாநாயர்கள்களாக நடிக்கிறார்கள்.இவர்களுக்கு ஜோடியாக மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐய்யர்,ஐஸ்வர்யா தட்டா, ரைஷா வில்சன் ஆகியோர் நடிக்கிறார்கள் . முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு , கிங்ஸ்லி, பிரதாப் போதன்,சம்யுக்தா ஷண்முகம் ,திவ்யா தர்ஷினி மற்றும் பல நட்சத்திர பட்டாளமே இணைந்து நடிக்கிறார்கள் . யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 19 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி - யுவன்சங்கர் ராஜா கூட்டணி சேரும் படம் இது . E .கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி…