1000 வருடத்திற்கு முன்பு நடந்த கதை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்!

1000 வருடத்திற்கு முன்பு நடந்த கதை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்!

கோலிவுட்டில் அறிமுக இயக்குநர்கள் பலர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள். இதற்கு காரணம், அவர்கள் கையாளும் கதைக்களமும் அதை திரைப்படமாக கொடுக்கும் விதமும் தான். அந்த வரிசையில் விரைவில் இடம் பிடிக்கப் போகிறார் ஜி.வி.பெருமாள் வரதன். ‘மரகத நாணயம்’ , ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். வரலாற்று சம்பவத்தை மையப்படுத்திய சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் நகைச்சுவையை சேர்த்து இவர் எழுதியிருக்கும் திரைக்கதையை கேட்ட பல பிரபலங்கள், படம் நிச்சயம் வெற்றி பெறும், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதால், இப்படக்குழு பெரும் உற்சாகமடைந்துள்ளனர். படம் குறித்து இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதனிடம் கேட்ட போது, “பல்லவ மன்னர்களில் முக்கியமமானவர் நந்தி வர்மன். அவரைப் பற்றிய உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன்.…
Read More