12
Apr
இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட கலைஞர்களுக்கு வழங்கி வருகிறது தமிழ் ஸ்டுடியோ. ஐந்தாம் ஆண்டாக இந்த குறும்படப்போட்டி நடைபெறுகிறது. விருதுத் தொகை: ஒரு ரோஜா பூ மட்டும் /- பாலுமகேந்திரா விருது விழாவில் சிறந்த இயக்கம், ஒளிப்பதிவு, ஒலியமைப்பு, படத்தொகுப்பு, நடிப்பு உள்ளிட்ட மொத்தம் பத்து பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். பாலுமகேந்திரா விருது குறும்படங்களை ஒரு இயக்கமாக, குறும்படங்களை மாற்று சினிமாவிற்கான களமாக மாற்றவே உருவாக்கப்பட்டது. எனவே மற்ற குறும்படப் போட்டிகளை போல் பாலுமகேந்திரா விருது நிகழாது. தொடர்ந்து குறும்படங்கள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் குறும்படங்கள் சார்ந்து பணியாற்ற வேண்டும். அதனை ஒரு அலையாக செயல்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இவ்விருது உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாலுமகேந்திரா விருது விழாவில் பங்கேற்று…