டிக்கிலோனா –  சந்தானத்தின் ஆவரேஜ்  காமெடி!

டிக்கிலோனா – சந்தானத்தின் ஆவரேஜ் காமெடி!

இயக்கம் - கார்த்திக் யோகி நடிப்பு - சந்தானம், அனாகா, ஷ்ரின் காஞ்ச்வாலா, யோகிபாபு கதை கரு: ஹாக்கி கனவு கொண்ட மணி என்னும் ஒருவன், திருமணத்திற்கு பிறகு தனது கனவை தொடர முடியாமல், வெறுப்பான வாழ்கை வாழுகிறான். அவனுக்கு கால இயந்திரம் பற்றி தெரிந்தவுடன், கடந்த காலத்திற்கு சென்று தன் வாழ்கையை மாற்றலாம் என முடிவு செய்கிறான். அதன் பிறகு அவன் தேர்தெடுக்கும் வாழ்கை, அவனுக்கு இன்பம் தருகிறதா, துன்பம் தருகிறதா என்பதே கதை கால இயந்திரத்தை பற்றி வரும் படங்களின், கால இயந்திரத்தை பற்றிய அடிப்படை தகவல்களை கொடுத்துவிட்டு, அதன் பிறகு கதையின் ஊடே பயணிப்பது என்பது தான் அடிப்படை விதி. டிக்கிலோனாவில் அதிக சிரத்தை எடுத்துகொள்ளாமல், கதைக்கு கால இயந்திரத்தின் தேவை எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு தகவல்களை மட்டும் தெளிவாக கொடுத்தது சிறப்பான ஒன்று. கால இயந்திரம் படத்தில் இடம்பெற்றாலும், படம் அதனை சுற்றி அமையவில்லை. கதாநாயகன்,…
Read More