11
Apr
நானி, ஶ்ரீகாந்த் ஒதெலா, SLVC உடைய புதுமையான படைப்பான “தசரா” படத்தின் பாடல் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது ! நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கதை சொல்லலில் தனித்துவமானவையாக இருந்தன. அந்த வகையில் எல்லாவற்றையும் தாண்டும் நேர்த்தியான ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் நானியின் முதல் பான் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தற்போது,…