17
Jan
'சேத்துமான்' என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது. "நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது" என்கிறார் இயக்குநர் தமிழ். 'ஹிருதயம்', 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படப்புகழ் தர்ஷனா ராஜேந்திரன், 'கனா' புகழ் தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர்.…