’தாராவி’ தொடரின் வெற்றிக்கு நடிகர்கள் தேர்வும் ஒரு முக்கியக் காரணம்!” – சமித் கக்கட்

’தாராவி’ தொடரின் வெற்றிக்கு நடிகர்கள் தேர்வும் ஒரு முக்கியக் காரணம்!” – சமித் கக்கட்

கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டும் வகையில் நடிகர்களின் வலுவான நடிப்பு ஒரு படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடலாம். அந்த வகையில், எம்.எக்ஸ் ஒரிஜினல் கதையான ’தாராவி பேங்க்’ இணையத்தொடரை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வது அதிலுள்ள நடிகர்களின் நடிப்புதான். மொத்தம் 10 எபிசோட்களைக் கொண்ட இந்த இணையத் தொடர், அமைதியற்ற காவல்துறை அதிகாரியான விவேக் ஆனந்த் ஓபராய் மற்றும் தமிழனாக டான் தலைவன் கதாபாத்திரத்தில் சுனில் ஷெட்டியும் நடித்துள்ளனர். டானாக இருந்தாலும் தலைவனின் இன்னொரு பக்கமான அவனது குடும்பத்தின் மீதான அன்பும் இதில் காட்டப்பட்டுள்ளது. தலைவனின் குடும்பமாக சாந்தி பிரியா, பாவனா ராவ் மற்றும் வம்சி கிருஷ்ணா ஆகியோர் தங்களது சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர். இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே தென்னிந்தியாவில் இருந்து சிறந்த நடிகர்களைக் கதைக்காகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தியாவில் வளர்ந்து வரும் ஓடிடி உள்ளடக்கத்திற்கு ஏற்றது போல ஏராளமான திறமைகள் மற்றும் புதிய கதைகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ’தாராவி பேங்க்’…
Read More

மோகன்லால் சாருடைய நடிப்பைப் போல கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்”- விவேக் ஆனந்த் ஓபராய்

MX ஒரிஜினல் இணையத்தொடரான 'தாராவி பேங்க்' வலுவான கதைக்களத்தோடு தாராவி பகுதியில் நடைபெறும் ஒரு பரபரப்பான குற்றச் செயல்களை உள்ளடக்கிய கதை ஆகும். இது போன்ற ஒரு பரபரப்பான கதைக்களத்தோடு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த இணையத் தொடரில் 10 எபிசோட்கள் இருக்கிறது. தாராவியின் பகுதிகளில் 30,000 கோடி ரூபாயை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான நிதி சாம்ராஜ்யத்தை வழி நடத்தக் கூடிய பிடிக்க முடியாத ஒரு தலைவனை துரத்தும் அமைதியற்ற காவல்துறை அதிகாரியை பார்வையாளர்கள் இதில் பார்க்கப் போகிறார்கள். இந்தத் தொடரில் JCP ஜெயந்த் கவாஸ்கர் கதாபாத்திரத்திற்காக விவேக் ஆனந்த் ஓபராய் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்த காவல்துறை அதிகாரி ரூல் புக்கில் உள்ளபடி நடந்து கொள்ளாதவன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், விதிகளை தனக்கேற்றபடி மாற்றிக் கொள்பவன்தான் இந்த ஜெயந்த் கவாஸ்கர். அதேபோல, தன்னுடைய உயர் அதிகாரிகளிடமிருந்து வரும் ஆதரவை அவன் விரும்புவதில்லை, அவனுக்கு என்ன தேவையோ…
Read More