நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் அவர்களின் இளையமகள் திருமணம்

நடிகர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் அவர்களின் இளையமகள் திருமணம்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமார் தலைமையில், தயாரிப்பாளர் டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் அவர்களின் இளையமகள் ஹரிதாவின் திருமணம் ஆதர்ஷனுடன் மிகப்பெரிய விழாவாக டிசம்பர் 12, 2022 சென்னையில் நடைபெற்றது டாக்டர். ஜி. தனஞ்ஜெயன் BOFTA ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனர், தமிழ் சினிமாவின் பிரபலமான பல திரைப்படங்களின் தயாரிப்பாளரும், தற்போது முன்னணி நடிகர் விஜய் ஆண்டனியுடன் (கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி) நான்கு படங்களை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக தயாரித்து வருகிறார். தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளராகவும் செயல்பட்டு வருகிறார். சினிமா குறித்த அவரது புத்தகம் மற்றும் எழுத்துக்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். ஜி. தனஞ்ஜெயன் அவர்களது இரண்டு மகள்களும் உயர் படிப்பை (M.S. in Computers) USA-வில் முடித்துவிட்டு தற்போது முன்னணி நிறுவனங்களில் அங்கே வேலை பார்த்து வருகின்றனர். இரண்டு மகள்களின் திருமணமும் நவம்பர் மற்றும் டிசம்பர்…
Read More