நான் சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை மிகவும் மதிக்கிறேன்! சைதன்யா பேட்டி

நான் சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை மிகவும் மதிக்கிறேன்! சைதன்யா பேட்டி

முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு சினிமாவில் பல படங்கள் நடித்து வருகிறார்.இவர் நடிகை சமந்தாவை 2017 -ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2021 -ம் விவாகரத்து பெற்றனர். தற்போது நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருமே திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாக சைதன்யா, " சமந்தாவுடன் வாழ்ந்த நாட்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர் மிகவும் நல்ல பெண்மணி. அவருக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியான விஷயங்கள் கிடைக்க வேண்டும்". "சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது எங்களை குறித்து வெளியாகும் வதந்திகள் எங்களிடையே உள்ள நல்லுறவை பாதிக்கிறது" என்று கூறியுள்ளார்.
Read More