16
Oct
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையின் விளையாட்டு சாதனை வரலாற்றை படமாக 800 என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கவும் அதில் விஜய் சேதுபதி நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் முத்தையா முரளிதரன், ராஜபக்சேவின் இன்னொரு முகம் எனவே அவர் குறித்து படத்தில் நடிக்கக் கூடாது என பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடங்கி ஏகப்பட்ட விஐபி-க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்க அறிக்கையில், "இது நாள் வரை நான் என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி,தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய…