பிரசாத் ஸ்டுடியோ காணாமல் போய் விடும்!- இளையராஜா சாபம்!

பிரசாத் ஸ்டுடியோ காணாமல் போய் விடும்!- இளையராஜா சாபம்!

கோலிவுட்டில் இசைஞானியான இளையராஜா பிரசாத் தியேட்டரில் இருந்து வெளியேற்றப் பட்ட நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வந்த RR ப்ரிவியூ தியேட்டரை விலைக்கு வாங்கி புதிய இசை ஸ்டுடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த புதிய ஸ்டுடியோவில் பூஜை போட்டு தனது படத்தின் பணிகளை இன்று (பிப்ரவரி 3) தொடங்கினார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி - விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பாடல் ரெக்கார்டிங் பணிகளைத் தொடங்கியுள்ளார் இளையராஜா. இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நேரில் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த ஸ்டுடியோவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் இளையராஜா. அப்போது அவர் பேசியது: "சென்னையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிப் படங்கள் தயாராகி வெளியே போய்க் கொண்டிருந்தன. அவ்வப்போது இந்திப் படங்களும் தயாராயின. இங்கிருந்த ஸ்டுடியோக்கள் வேறு எங்கும் இல்லை. அந்தச் சமயத்தில் ஆசியாவிலேயே பெரிய ஸ்டுடியோவாக…
Read More