23
Aug
அஜீத் குமார் அபிமானிகள் எதிர்பார்த்த "விவேகம்" நாளை ரீலீஸ் ஆகிறது. திட்டமிட்டதைக் கட்டிலும் இப்படத்திற்கு கூடுதலாக செலவானதாக கூறப்படுகிறது. அஜீத் குமார் இதுவரை நடித்த படங்களில் அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள விவேகம் பட அதிக விலைக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.போட்டிக்கு படமில்லை, முழுக்க வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அஜீத் - சிவா இணைந்துள்ள மூன்றாவது படம். கமல்ஹாசன் மகள் அக்சரா ஹாசன், காஜல் அகர்வால், இந்தி நடிகர் விவேக் ஓபராய் முதன் முறையாக அஜீத் உடன் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் அஜீத் நடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர் பார்ப்பு நாளுக்கு நாள் கூடி வருகிறது. இது வரை வெளியான அஜீத் குமார் நடித்த படங்களில் விவேகம் அதிகமான விலைக்கு விற்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அதிகமானவசூல் ஆக வேண்டும். சிறுத்தை சிவா ஏற்கனவே அஜீத் நடித்த வீரம், வேதாளம் படங்களை இயக்கியவர்.இரண்டு படங்களும் விழா நாட்களில் ரீலீஸ் செய்யப்பட்டது. வசூல் ரீதியாகமிகப் பெரிய…