அமீர் நடித்த ’நாற்காலி’ பட பாடலை முதல்வர் வெளியிட்டார்!

அமீர் நடித்த ’நாற்காலி’ பட பாடலை முதல்வர் வெளியிட்டார்!

இயக்குநர் அமீர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாற்காலி’. மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிக்கும் இப்படத்தை ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்குகிறார். அரசியலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” என்ற எம்.ஜி.ஆர் பாடல் இடம்பெறுகிறது. இந்த நிலையில், எம்.ஜி.ஆர்-ன் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாற்காலி’ படத்தின் ”நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டார். முதல்வரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாடல் குறுந்தகடை வெளியிட, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பெற்றுக்கொண்டார். இதோ அந்த பாடல்: https://www.youtube.com/watch?v=Xj9aju_o7IE&feature=youtu.be
Read More
ஹைதராபாத்தில் உலகத் தரமான திரைப்பட நகரம் – தெலுங்கானா முதல்வர் தகவல்!

ஹைதராபாத்தில் உலகத் தரமான திரைப்பட நகரம் – தெலுங்கானா முதல்வர் தகவல்!

ஹைதராபாத்தில் விமான இறங்குதளத்துடன் கூடிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். நேற்று (08.11.20) தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜுனா உள்ளிட்டோர் தெலங்கானா வெள்ள நிவாரண நிதிக்காகத் திரட்டிய தொகையை முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து ஒப்படைத்தனர். மேலும், தெலங்கானாவில் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளித்ததற்கும் நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் சந்திரசேகர் ராவ், ஹைதராபாத் நகரில் 1,500 - 2,000 ஏக்கர் பரப்பளவில் விமான இறங்குதளத்துடன் கூடிய திரைப்பட நகரம் உருவாக்கப்படும் என்று கூறினார். இதுகுறித்து அவர் பேசியதாவது: ''1,500 - 2,000 ஏக்கர் பரப்பளவில் விமான இறங்குதளம் உள்ளிட்ட அனைத்துவிதமான வசதிகளுடன் கூடிய உலகத் தரத்திலான திரைப்பட நகரம் ஒன்று ஹைதரபாத் புறநகர்ப் பகுதியில் உருவாக்கப்பட உள்ளது. அங்கு எதிர்காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஸ்டுடியோக்களை அமைக்க திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு…
Read More