13
Nov
கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த சிறு பிரச்சினைகளால் புதிய திரைப்படங்கள் வெளிவராத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் சில வெளியாகின்றன. இதை அடுத்து, தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கு வரவேற்பு தெரிவித்து இருக்கும் நடிகர் பப்ளிக் ஸ்டார், படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களை பாராட்டியிருப்பதோடு, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். ‘களவாணி 2’ மூலம் வில்லன் வேடத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார். பிறகு விஜய் சேதுபதியின் ‘க/ப ரணசிங்கம்’ படத்தில் ஒரு…