23
Sep
சூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த, மந்திரவாதிப்பெண்னை கூட்டி வர மந்திர தந்திரம் நிறைந்த யாரும் நுழையாத ஒரு மலை கிராமத்திற்குள், காதலி வேஷமிட்ட தன் நண்பனுடன் நுழைகிறான். மந்திர மாயாஜாலங்கள் நிறைந்த அந்த ஊருக்குள் இருக்கும் ஒரு பெண்ணை காதலித்து எப்படி தன் ஊருக்கு அழைத்து வருகிறான் என்பதே கதை. முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில் ஒரு ச்வீட் சர்ப்பரைஸாக வந்துள்ளது சூ மந்திரகாளி. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் தான் ஃபேண்டஸி சிந்தனை அதிகம் இருக்கும். நம் ஊரில் முண்டாசுப்பட்டி மாதிரி சிந்தனைகள் அபூர்வம். அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் வந்துள்ளது இந்தப்படம். படத்தின் ஆரம்பத்திலேயே லாஜிக் எல்லாம் எதுவும் இல்லை சிரிக்க சிரிக்க மேஜிக் மட்டுமே…