சாம்பியன் விஷ்வா அடுத்து  மீம்’ கலைஞராக நடிக்கிறார்!

சாம்பியன் விஷ்வா அடுத்து மீம்’ கலைஞராக நடிக்கிறார்!

சுசீந்திரன் இயக்கத்தில் கால்பந்து வீரராக அறிமுகமானவர் விஷ்வா. கால் பந்து பயிற்சி பெற்று நடித்து, முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ‘மீம்’ கலைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது:-“சாம்பியன்” படத்தில் என் நடிப்பை பார்த்து பிடித்து விட்டு KH பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கரன் என்னை பாராட்டினார். அதன் பின், டைரக்டர் பாரதி பாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார். இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களை கவரும் படியாக இருக்கும். நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது ‘மீம்’ கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன். வினோத் என்கிற ‘மீம்’ கலைஞரோடு பயிற்சி எடுத்து வருகிறேன். அவரிடம் ‘மீம்’ பற்றி நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்”என்றார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு நடைப்பெற்று வருகிறது. தயாரிப்பு: கோமளா,…
Read More
சுசீந்திரன்  இயக்கும் “சாம்பியன் “ ஷூட் ஆரம்பிச்சாச்சு!

சுசீந்திரன் இயக்கும் “சாம்பியன் “ ஷூட் ஆரம்பிச்சாச்சு!

“ வெண்ணிலா கபடி குழு “ , “ ஜீவா “ போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது “ சாம்பியன் “ என்ற புட்பாலை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படப்பிடிப்பை கேமராவை இயக்கி தயாரிப்பாளர் G.K. ரெட்டி துவக்கிவைத்தார். இதில் நடிகர் , நடிகையர் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். G.K. ரெட்டி , அஞ்சாதே நரேன் , R.K. சுரேஷ் , ஜெயபிரகாஷ் , ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அரோல் குரோலி இசையில் , சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால்பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறார். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் K.ராகவி இப்படத்தை தயாரிக்கிறார். டிசம்பர் வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.
Read More
error: Content is protected !!