எப்படி இருந்த நடிகர் தவசி – இப்படி ஆயிட்டாரே!- அதிர்ந்து போன கோலிவுட்!

எப்படி இருந்த நடிகர் தவசி – இப்படி ஆயிட்டாரே!- அதிர்ந்து போன கோலிவுட்!

புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் தவசிக்கு சூரி , சிவகார்த்திகேயன் மற்றும் திமுக எம்எல்ஏ ஆகியோர் நிதியுதவி வழங்கி உதவியுள்ளனர் தமிழ் திரை உலகில் பிரபலமான துணை நடிகராக வலம் வருபவர் தான் தவசி. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், கொம்பன் உள்ளிட்ட வெற்றி திரைப் படங்களில் நடித்து பிரபலமானவர். இவரை தவசி என்று சொல்வதைவிட கருப்பன் குசும்புக்காரன் எனும் ஒற்றை வசனத்தில் குறிப்பிட்டால் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும். முரட்டு மீசையுடன் கிராமத்து தோற்றத்தில் காணப்படக்கூடிய இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்பொழுது இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். வாட்டசாட்டமான உடலுடன் முரட்டு மீசையுடன் இருக்கும் இவர் முகத்தில் மீசை இன்றி, முடியின்றி மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அதிர்ந்து போயுள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு…
Read More