25
Mar
தெலுங்கில் தொடர்ந்து 6 வெற்றி படங்களையும், கடந்த 2016 ஆம் ஆண்டில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் 4 தொடர் வெற்றி படங்களையும் கொடுத்த ஸ்ருதி ஹாசன், தற்போது தமிழிலும் - தெலுங்கிலும் இரண்டு மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்து, இந்த 2017 ஆண்டை வெற்றிகரமாக துவங்கி இருக்கிறார். தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து, வர்த்தக உலகின் நாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனுக்கு, சமீபத்தில் வெளியான பவன் கல்யாணின் 'கட்டமராயுடு' திரைப்படம் மேலும் பெருமையை சேர்த்துள்ளது. இதை பற்றி திரையுலக வர்த்தக துறையில் இருக்கும் நிபுணர் ஒருவர் கூறுகையில், ""வர்த்தக உலகில் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை பதித்து இருக்கும் ஸ்ருதி ஹாசன், கட்டமராயுடு படம் மூலம் தொடர்ந்து தெலுங்கில் ஆறு வெற்றி படங்களை கொடுத்து இருக்கும் கதாநாயகியாக உருவெடுத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, தமிழ் - தெலுங்கில் வெளியான 'சிங்கம் 3' திரைப்படம்…