20
May
இந்தியாவின் முன்னணி திரையரங்க குழுமங்களில் ஒன்றான பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் நாடு முழுவதுமுள்ள 50 திரையரங்களை மூட இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பிவிஆர் நிறுவனத்துடன் ஐநாக்ஸ் குழுமம் இணைக்கப்பட்டு பிவிஆர் - ஐநாக்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொடர் நஷ்டத்தை சந்தித்து வரும் 50 திரையரங்களை அடுத்த ஆறு மாதங்களில் மூட இருப்பதாக பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.333 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது. அதற்கு முந்தைய முந்தைய டிசம்பர் காலாண்டில் ரூ. 16.1 கோடி லாபமும், அதற்கு முந்தைய காலாண்டில் ரூ.105 கோடி நஷ்டமும் பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.நான்காவது காலாண்டில், செயல்பாடுகளின் வருவாய் இருமடங்காக அதிகரித்து, ரூ.1,143 கோடியை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.536 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.…