21
Feb
சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை, அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ராஜாக்கார்”. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் பலர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது. இந்நிகழ்வினில்.. திரு பீம்ஸ் இசையமைப்பாளர் பேசியதாவது.. என் தாத்தா குடூர் நாராயண ரெட்டி வரலாற்றை கூறியிருக்கிறார். இந்தப்படத்தில் மூலம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். இப்படியொரு சிறப்பான படைப்பில் நானும் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி. நடிகை வேதிகா பேசியதாவது… வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்காக என்னை அழைத்தபோது எனக்கே உண்மையான வரலாறு தெரியாது. ஹைதராபாத் மாநிலத்திற்கு…