டில்லி பாபு தயாரிப்பில் 4 டைரக்டர்கள் வழங்கும் நான்கு ‘விக்டிம்’ கதைகள் கொண்ட திரைப்படம்!

டில்லி பாபு தயாரிப்பில் 4 டைரக்டர்கள் வழங்கும் நான்கு ‘விக்டிம்’ கதைகள் கொண்ட திரைப்படம்!

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம், ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன் இணைந்து தயாரிக்கவிருக்கும் ஆந்தாலஜி திரைப்படம் ‘விக்டிம்.’ தயாரிப்பாளர் G.டில்லிபாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழ் சினிமாவில் சீரான தனிப் பாதையில் பயணித்து, மதிப்புமிகு நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. 2014-ல் ஆரம்பித்த இந்த தயாரிப்பு நிறுவனம் வெகு அழகான தரமிக்க படங்களை தந்து வருகிறது.‘மரகத நாணயம்’, IMDB தளத்தில் இந்திய படங்களின் வரிசையில் முதல் இடத்தை தக்க வைத்திருக்கும் ‘ராட்சசன்’ மற்றும் 2020-ல் மிகப் பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ‘ஓ மை கடவுளே’ என தொடர்ந்து கருத்திலும், சுவையிலும் கலக்கும்  படங்களை இந்நிறுவனம் தந்து வருகிறது. தற்போதைய நிலையில் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம்  மூன்று படங்களை தயாரித்து வருகிறது. மூன்று படங்களும் தயாரிப்பின்  வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் நிலையில், தற்போது ப்ளாக் டிக்கெட் கம்பெனியுடன்  இணைந்து நான்கு  கதைகள் கொண்ட ‘விக்டிம்’ எனும் ஆந்தாலஜி படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் நான்கு வெவ்வேறு கதைகளை, இயக்குநர்கள் சிம்பு தேவன்…
Read More