சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட படைப்பு  “SK 20” !

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” !

நடிகர் சிவகார்த்திகேயன் & “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV கூட்டணியில், காமெடி திருவிழாவாக, தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. திரைத்துறையில் ஒரு நடிகருக்கு ‘ஸ்டார்' அந்தஸ்தும், அதே நேரத்தில் நம் வீட்டு பையன் போன்ற தோற்றமும் அமைவது மிகவும் அரிது. அப்படிப்பட்ட தகுதியுடன் ஒருவர் வரும்போது உலகளவில் அனைத்து தரப்பினரின் மனதிற்கும் மிகவும் நெருக்கமானவராக ஆகிவிடுகிறார். அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தவராக நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான “டாக்டர்” உலகளாவிய வகையில் ரசிகர்களின் மனதை வென்று, முழு வர்த்தக வட்டத்திற்கும் லாபகரமான படமாகவும் அமைந்து, அவரது நட்சத்திர அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. அவரது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான “டான்” ஏற்கனவே வர்த்தக வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, வர்த்தக வட்டத்தில் அப்படத்தை, இப்போதே…
Read More