15
Apr
இயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னுடைய பெயரில் ஒரு திரைப்படக் கல்லூரியை துவக்கியிருக்கிறார். பாரதிராஜா சர்வதேச திரைப்படக் கல்லூரி என்ற பெயர் சூட்டப்பட்ட இந்தக் கல்லூரியின் துவக்க விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் கமலஹாசன், நாசர், சிவகுமார், கார்த்தி, வைரமுத்து மற்றும் இயக்குனர்கள் பார்த்திபன், பாண்டிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் கலமஹாசன், கற்ற வித்தையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க உள்ள பாரதிராஜா சமண முனிவருக்கு ஈடானவர். தடைகளை தாண்டி கலைஞனை உருவாக்கத் தெரிந்தவர். சினிமா என்பது பல பேர் சேர்ந்து உருவாக்கும் ஒரு ஜனநாயக கலை என அவர் புகழாரம் சூட்டினார். பின்னர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தேசிய விருது வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமலஹாசன், தேசிய விருது தேர்வு செய்வதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். தேசிய விருது தேர்வுக்குழுவில் 12 பேர் உள்ளனர் என…