16
Sep
தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று 1983-ம் ஆண்டு இதே செப் 15இல் வெளியானது ‘மண் வாசனை’.‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் டைரக்ஷனில் உருவான இந்தப் படத்தில்தான் நடிகை ரேவதியும், நடிகர் பாண்டியனும் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமானாய்ங்க அதோடு இந்தப் படம்தான் பத்திரிகை தொடர்பாளர், , இயக்குநர், நடிகருமான சித்ரா லட்சுமணன் தயாரிச்ச முதல் படமாகும். பாரதிராஜாவின் படைப்புகளில் ‘கிராமத்துச் சாயல்’ இருந்ததைப் போலவே வணிக அம்சங்களைக் கொண்ட ‘சினிமா’வும் அதிகம் இருந்துச்சு. அசலான கிராமத்து மனிதர்கள் ஒருபுறம் நடமாடிக் கொண்டு இருப்பாய்ங்க என்றால் அதன் இன்னொரு பக்கம் மரத்தின் மறைவில் இருந்து ஒரு கண் மட்டும் தெரிய வெட்கப்பட்டு வானத்தை நோக்கி சிரிக்கும் ‘சினிமா ஹீரோயினும்’ இருந்தார். இப்படி யதார்த்தமும் ரொமாண்டிசஸம் ஆகிய இரு பண்புகளும் கலந்ததுதான் பாரதிராஜாவின் சினிமா.பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களில் கிராமத்துக் கலாசாரமும் பண்பாடும் நிலவெளியின் அழகியலும் மிக வலுவாக வெளிப்பட்ட படைப்புகளில் முக்கியமானது ‘மண் வாசனை’.தலைப்பிற்கு…