பேச்சி இரண்டாம் பாகம்? – தயாரிப்பாளர் கோகுல் பினாய் உறுதி!

பேச்சி இரண்டாம் பாகம்? – தயாரிப்பாளர் கோகுல் பினாய் உறுதி!

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இயக்குநர் B.ராமச்சந்திரன் பேசுகையில், “இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களை சந்தித்தோம், இப்போது மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி. பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்கான விளம்பரத்திற்காக தான் என்றாலும், என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்கு போடப்பட்ட காட்சி தான் எனக்கான முக்கியமான தருணம். படம் போட்ட பிறகு நான் பதற்றத்துடன் நின்றுக்…
Read More
குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் ! ‘தூக்குதுரை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட்டில் நடிகர் சென்றாயன்!

குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் ! ‘தூக்குதுரை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட்டில் நடிகர் சென்றாயன்!

ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.   நடிகர் சென்றாயன், “படத்தின் டைட்டில் 'தூக்குதுரை' போலவே படமும் ரொம்ப பாசிடிவாக, நன்றாக வந்துள்ளது. ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள், படக்குழுவினர் என எல்லாருமே தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் மூன்று தயாரிப்பாளர்களும் நல்ல மனிதர்கள். ’பணத்தைச் சேர்த்து வைத்து படம் தயாரிக்க வந்துள்ளோம். நல்ல படம் வேண்டும்’ என இயக்குநரிடம் கேட்டார்கள். அதுபோலவே வெற்றிப் படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம். படத்தைத் திரையரங்குகளில் பார்த்து வெற்றி கொடுங்கள்”. நடிகர் பால சரவணன், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு முக்கியமான…
Read More
விமல் நடிப்பில் வெளியாகும் இணைய தொடர், ஜீ5 தமிழ் ஒரிஜினல் “விலங்கு” !

விமல் நடிப்பில் வெளியாகும் இணைய தொடர், ஜீ5 தமிழ் ஒரிஜினல் “விலங்கு” !

  ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களின் விருப்பமான தளமாக இருந்து வருகிறது. ஜீ5 உடைய அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது ‘விலங்கு’ இணைய தொடர். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள "விலங்கு" என்ற ஒரிஜினல் இணைய தொடர், பிப்ரவரி 18, 2022 வெளியாகிறது. இதன் வெளியீட்டை ஒட்டி இன்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் நடிகர் பாலசரவணன் பேசியதாவது… நான் நடித்த படங்களில் என்னை பற்றி எழுதி ஆதரவளித்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. விலங்கு தொடர் எனக்கு முக்கியமானது. பிரசாந்த் எனக்கு உயிர் நண்பன், அவனிடம் காமெடியனாக நடிக்கிறேன், குணசித்திரத்தில் நடிக்க வேண்டும் என சொன்னேன், அப்போது தான் இந்தக்கதை சொல்லி இதில் வரும் கதாப்பாத்திரத்தில் நடிக்க சொன்னான். ஒரு பெரிய நடிகர் நடிக்க வேண்டிய பாத்திரம் என்னை நம்பி கொடுத்த…
Read More