பாகுபலி-2 விநியோக நிறுவனமான கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது

பாகுபலி-2 விநியோக நிறுவனமான கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது

பாகுபலி-2 விநியோக நிறுவனமான கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுகிறது பல வெற்றிப்படங்களை வெளிநாடுகளில் விநியோகித்துள்ள கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், எஸ்டிஆர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடவுள்ளது. அங்குள்ள 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மாநாடு வெளியாகும். பாகுபலி-2 திரைப்படத்தை 1000-க்கும் அதிகமான திரைகளில் 2017-ம் ஆண்டு வெளியிட்ட கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷியாம் படத்தை 2022 ஜனவரியில் விநியோகிக்க உள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட படங்களை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் விநியோகித்துள்ளது. பெருந்தொற்றின் போது தற்காலிகமாக மூடப்பட்ட திரையரங்குகள் 2021-ல் மீண்டும் திறக்கப்பட்ட போது, அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்களில் முதல்முறையாக தென்னிந்திய திரைப்படங்களை வெளியிட்டதும் கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் நிறுவனமே ஆகும். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படத்தில் இது வரை ஏற்றிராத வேடத்தில் எஸ்டிஆர் நடிக்கிறார். கல்யாணி…
Read More
‘பாகுபலி’ கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது! – ராஜமெளலி பேட்டி

‘பாகுபலி’ கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது! – ராஜமெளலி பேட்டி

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி வெளியாகவுள்ள ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக, படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், ராஜமௌலி பேசும்போது, ‘பாகுபலி’ படம் பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். ஆனால் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரலாற்று படம் செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினோம். முதல் பாகம் தமிழில் பெரும் வெற்றி பெற்றது, அதற்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை. இது ஒரு கற்பனை கலந்த வரலாற்று படம். ஆகையால் இந்த காலத்தில் தான் இக்கதை நடைபெற்றது என்று சொல்ல முடியாது. கதையை 1000 வருடங்களுக்கு முன்பு நடப்பது போல வைத்துக் கொண்டோம். 'பாகுபலி' கதையைத் தொடங்கும் போது…
Read More