02
Apr
பதான் & ஜவான் படத்தின் மூலம் புகழ் பெற்ற ஸ்டண்ட் இயக்குநர் கிரேக் மேக்ரே 'படே மியான் சோட் மியான்' படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பூஜா எண்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பில் உருவாகி வரும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான, 'படே மியான் சோட் மியான்,' அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. இப்படத்திலிருந்து இதுவரை வெளியான பாடல்கள் முதல் மற்றும் கடந்த வாரம் வெளியான டிரெய்லர் வரை இந்தத் திரைப்படம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இப்படம் ஏப்ரல் 10, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 'படே மியான் சோட் மியான்' திரைப்படம் இந்திய திரையுலகில் இதுவரை வெளிவராத ஒரு பிளாக்பஸ்டர் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் படங்களான பதான் மற்றும் ஜவான் ஆகியவற்றில் பரிபுரிந்த சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்டண்ட் இயக்குனரான கிரேக் மேக்ரேயின் இப்படத்தின் ஆக்ஷன் இயக்குனராக இணைந்துள்ளார். கிரேக்…