விஷால் & ஆர்யா நடித்து வரும் பட முதல் ஷெட்யூல் முடிந்தது!

விஷால் & ஆர்யா நடித்து வரும் பட முதல் ஷெட்யூல் முடிந்தது!

விஷாலின் நடிப்பில் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் ஸ்டூடியோவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்தப் படத்தின் படப்பிடிப்பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பாகத்தான் விஷால் கலந்து கொள்ளவில்லை. காரணம், அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நலக் குறைவு. ‘அவன் இவன்’ படத்தில் மாறு கண் தோற்றத்தில் தொடர்ந்து பல நாட்கள் நடித்ததன் விளைவாக அவருக்கு மைக்ரேன் தலைவலி தொடர்ந்திருக்கிறது. இந்தத் தலைவலி விஷாலுக்கு திடீரென்று வருவதும், பின்னர் சிகிச்சையளித்தவுடன் போய்விடுவதுமாக இருக்கிறது. இந்தத் தலைவலி பிரச்சினையினால்தான் கடந்த 2 தினங்களாக விஷாலால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இதைத்தான் வதந்தியாளர்கள் ‘இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் சண்டை.. விஷால் டிமிக்கி’ என்றெல்லாம் எழுதி வருகிறார்கள். ஆனால், மூன்றாவது நாளில் இருந்து விஷால் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். 2 நாட்களாகத் தான் நடிக்காததால் ஏற்பட்ட நேர இழப்பினை சரிக்கட்ட தொடர்ந்து இரவு, பகலாக அந்தப் படத்தில்…
Read More