” அருவா சண்ட ” படத்திற்கு தேசிய விருது நிச்சயம்  தயாரிப்பாளர் கேயார் நம்பிக்கை

” அருவா சண்ட ” படத்திற்கு தேசிய விருது நிச்சயம் தயாரிப்பாளர் கேயார் நம்பிக்கை

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அருவா சண்ட’. 'சிலந்தி', ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் 'நினைவெல்லாம் நீயடா' ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் ஆதிராஜன் பாடல்களை எழுத, தரண்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி தானு பாடல்களை வெளியிட, தயாரிப்பாளர்கள் முரளி இராமநாராயணன், கேயார், கே.ராஜன், அசோக்சாம்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய படத்தின் தயாரிப்பாளர் வி.ராஜா பேசியதாவது:- “இந்தப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். உயிரை கொடுத்து இந்த விழாவை நடத்துகிறோம். தயாரிப்பாளர் அண்ணன் கே.ராஜன் சினிமா விழாக்களில் பேசும்போது “படத்தின் ஹீரோயின் ஏன் விழாவில் கலந்துகொள்ளவில்லை” என்று ஒவ்வொரு மேடையிலும் பேசுவார். ஹீரோயின்கள் மட்டுமல்ல, அம்மா கேரக்டர்களில் நடிப்பவர்களும் கலந்துகொள்வதில்லை. இந்தப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யா…
Read More