17
Jan
பொங்கல் பண்டிகைக்கு வெளியான படங்களில் முதல் படமாக வெற்றியை கொண்டாடி இருக்கு மிஷன் திரைப்படம். அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க லண்டன்ல படமாக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு முழு ஆக்சன் படமா உருவாகியிருந்த, இந்த படம் முதல் நாள் தியேட்டர்கள் கிடைக்காம சில தியெட்டர்கள்ல மட்டுமே ரிலீஸானது. ஆனால் மறுநாளே பிக்கப் ஆகி, இப்ப பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல்லா ஓடிட்டு இருக்கு. இதை கொண்டாடுற விதமா இந்த படத்தோட டீம், பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று நன்றி தெரிவித்தார்கள். வித்தியாசமான படங்கள் மூலமாக ரசிகர்கள மகிழ்விச்சுட்டு வர்ற அருண் விஜய் இந்த படம் மூலமா ஒரு ஆக்சன் விருந்த தன்னோட ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். இயக்குனர் விஜயோட முழு ஆக்சன் கதை ரசிகர்களுக்கு பிடித்ததால இந்த படம் இப்ப முன்னணியில் வர ஆரம்பிச்சிருக்கு.இந்த படத்தோட பட்ஜெட்டை தாண்டி, இந்த படம் இப்ப சம்பாதிக்க ஆரம்பிச்சதுல படத்தோட டீம்…