28
Jan
அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைத்துள்ளனர். ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது. ஹீரோ தனது மனைவி மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. இதை சுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து அதோமுகம் படத்தை உருவாக்கியுள்ளார்கள். கதையின் நாயகனாக சித்தார்த் எஸ். பி. கதையின் நாயகி சைத்தன்யா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான…