இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் தனுஷ் !!

இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் தனுஷ் !!

Connekkt Media, PK Prime Production & Mercuri Movies நிறுவனங்களின் தயாரிப்பில், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் புதிய திரைப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் நடிக்க, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. உலகநாயகன் கமலஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி இப்படத்தினை துவங்கி வைத்தார். இவ்விழாவினில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, திரு கங்கை அமரன், இயக்குநர் சந்தான பாரதி, திரு ரங்கராஜ் பாண்டே , இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் பேரரசு, முதலான திரைபிரபலங்கள் கலந்து கொண்டு படக் குழுவினரின் வாழ்த்தினர். நடிகர் கமலஹாசன் பேசும்பொழுது... எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்பதை எனக்குப் புரியவில்லை இது மிக நீண்ட ஒரு பயணம் உங்களுக்கு உண்டு எங்களுக்கு இடையிலான நட்பு என்பது மிகப்பெரியது அவர் இவர் தான் இளையராஜா என்று தெரியாமல் இருந்த காலத்திலிருந்து அறிந்தவன்…
Read More