நீண்ட இடைவெளிக்கு பின்னர் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகை அனுஷ்காவின் படம் வெளியாகியுள்ளது!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகை அனுஷ்காவின் படம் வெளியாகியுள்ளது!

தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் உச்சத்தில் இருந்தவர் நடிகை அனுஷ்கா, பாகுபலி படத்திற்கு பிறகு பெரிதாக எந்த படத்திலும் அவரது நடிப்பு பேசப்படவில்லை . இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில்  உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படம் இன்று  செப்டம்பர் 7 )திரையரங்கில் வெளியானது, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அனுஷ்கா.2020-ஆம் ஆண்டு வெளியான ‘நிசப்தம்’ படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் அனுஷ்கா நடிக்கலை. உடல் பருமன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்பட்டது, இந்தச் சூழலில் தற்போது அனுஷ்கா ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அனுஷ்காவுக்கு ஜோடியாக நவீன் பொலிஷெட்டி நடித்துள்ளார். இவர் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாஸ்’ படத்தின் மூலம் பிரபலமானவர். மகேஷ் பாபு.பி இயக்கியுள்ள இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள்…
Read More
அனுஷ்காவின் அசத்தல் நடிப்பில்  ‘பிரமாண்ட நாயகன்  ‘!

அனுஷ்காவின் அசத்தல் நடிப்பில் ‘பிரமாண்ட நாயகன் ‘!

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்ட கோடி 'பிரமாண்ட நாயகன்.' ராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டது. ஜனரஞ்சகமாக இன்றைய நவீன காலத்திற்கேற்ப மிகச்சிறந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ள படம் எனலாம். இப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 60 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ். பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர். மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். 'பாகுபலி'க்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார். பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம், வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள்…
Read More
அனுஷ்காவுடன் கல்யாணமா? பிரபாஸ் பதில்!

அனுஷ்காவுடன் கல்யாணமா? பிரபாஸ் பதில்!

நடிகை அனுஷ்காவுடன் காதல் என்ற தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மை இல்லை. தற் போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை’ என்று நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.  பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகர் பிரபாஸ், ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு, வெளிநாடுகளிலும் பிரபலமாகி விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிவரும் ‘சாஹோ’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில், இவரது திருமணம் குறித்து பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. நடிகை அனுஷ்காவுடன் காதல் என்றும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அவர்கள் இருவரும் இத்தகவல்களை மறுக்காததால், ஒருவேளை உண்மையாக இருக்கு மோ என்ற சந்தேகமும் இருந்தது. இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித் துள்ள பிரபாஸ், தனது திருமணம் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அப்போது அவர் கூறியது, “தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இதனால்…
Read More