25
Nov
மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா, துரை சுதாகர், வழக்கு எண் முத்துராமன், ஜெயராஜ், சார்லஸ் வினோத், நடன இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்., இந்தப்படத்தில் நடித்துள்ள கானா பாடகர்களை மேடைக்கு வரவழைத்து அற்புதமான கானா பாடல்களை பாடவைத்து கலகலப்பாக இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை துவங்கினார்கள்.. நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவி பேசும்போது, “இந்தக்கதையை என்கிட்டே சொல்றதுக்காக மாறன் வந்தப்ப, கிட்டத்தட்ட மூணுதடவை அவரை திரும்ப திரும்ப வரவச்சு கதை கேட்டேன்..…