ஜெயிலர் படத்திற்கு சென்சார் குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது ! இத்தனை விதிகளா!

ஜெயிலர் படத்திற்கு சென்சார் குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது ! இத்தனை விதிகளா!

  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படமான ஜெயிலர் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது, இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார், மேலும் நடிகை தமன்னா மற்றும் மோகன்லால் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது, இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது, இந்தப் படத்திற்கு சென்சார் குழு யுஏ சான்றிதழை வழங்கியுள்ளது.எனினும் படத்தில் ரவுடிகள் கொலை செய்யும் போது ஏற்படும் ரத்த காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டுள்ளன. கார் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொறுப்பு துறப்பு போடவும், கொலை செய்யும் காட்சிகளின் நீளத்தை குறைக்கவும், நான் எஞ்சாய் பண்ணிக்கறேன் என்ற வசனத்தை மியூட் செய்யவும், புகைப்பிடித்தல் காட்சிகளை நெருக்கமாக காட்டுதவதை தவிர்க்கவும் படக்குழுவுக்கு தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. அதன்படி படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது
Read More
குறட்டையை மையப்படுத்தி தயாராகும் ‘குட் நைட்’!

குறட்டையை மையப்படுத்தி தயாராகும் ‘குட் நைட்’!

'ஜெய் பீம்' நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குட் நைட்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிரூத் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'குட் நைட்'. இதில் 'ஜெய் பீம்' மணிகண்டன்  கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்குநராக ஸ்ரீகாந்த் கோபால் பணியாற்ற, பட தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும்…
Read More