நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் ஆண்ட்ரியா

நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் ஆண்ட்ரியா

  தரமான படைப்புகளை தொடர்ந்து அளித்து வரும் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தற்போது பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்"புரொடக்‌ஷன் No.3" படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றது. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க,  ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பால சரவணன், யுவலக்‌ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ் மேற்கொள்ள, ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார். படத்தொகுப்பை, சரத்குமார் கவனிக்கிறார்.  பாபி ஆண்டனி, ஆண்டனி பாக்யராஜ், சவரி முத்து மூவரும் வசனம்  எழுதுகின்றனர்.
Read More