‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது !!

‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது !!

இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5, 2024 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஹைதராபாத்தில் விநியோகஸ்தர்களுடன் நடந்த பிரமாண்ட நிகழ்வின் போது படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. ரசிகர்களின் விருப்பமான ‘புஷ்பாராஜ்’ டிசம்பர் 5 ஆம் தேதி ரசிகர்களின் இதயத்தை மீண்டும் ஆள வருகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களுக்கு சிறப்பான திரையரங்க அனுபவம் தர வேண்டும் என்பதற்காக இயக்குநர் சுகுமார் ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய வணிகம் பாக்ஸ் ஆஃபிஸில் புதிய சாதனை படைத்து ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ‘ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பெரிய திரையில் அவரை மீண்டும் புஷ்பாவாக காண ஆவலுடன்…
Read More
தேசிய திரைப்பட விருது பெற்ற அல்லு அர்ஜுன் ! ‘புஷ்பா – தி ரைஸ்’ படத்திற்காக விருதை பெற்றார் !

தேசிய திரைப்பட விருது பெற்ற அல்லு அர்ஜுன் ! ‘புஷ்பா – தி ரைஸ்’ படத்திற்காக விருதை பெற்றார் !

'புஷ்பா - தி ரைஸ்' திரைப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் 69வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று சரித்திரம் படைத்துள்ளார். ஆகஸ்ட் மாத இறுதியில் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று புது தில்லி, விஞ்ஞான் பவனில் பிரம்மாண்டமாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம், அல்லு அர்ஜுன் தனது நடிப்பு பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். நாட்டின் இந்த மதிப்புமிக்க கவுரவத்தைப் பெறும் முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜூன் பெற்றுள்ளார். ஷெர்வானி ஜாக்கெட் அணிந்து, மிகவும் நேர்த்தியுடன் இந்த விருது விழாவிற்கு வந்தார் அல்லு அர்ஜூன். இந்த விழாவில் அவர் தனது மனைவி அல்லு சினேகா ரெட்டியுடன் கலந்து கொண்டார். 2021 இல் வெளியான ‘புஷ்பா - தி ரைஸ்’ பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது மற்றும் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் இதுவும்…
Read More