13
May
நடிகை ஆலியா பட் நடிகர் ரன்பீர் கபூரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் குறித்து தகவவல்கள் அனைத்துமே ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. திருமணம் எங்கு நடக்கிறது என்ற தகவல் கூட மர்மமாகவே இருந்தது. இறுதியில் பாந்த் ராவில் உள்ள ரன்பிர் கபூர் இல்லத்தில் இத்திருமணம் நடந்தது. திருமணத்திற்கு குறிப்பிட்ட சிலரே அழைக்கப்பட்டனர். தனது திருமணம் குறித்து ஆலியா பட் முதல் முறையாக நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் எனது திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இது தொடர்பாக ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது. நான் சோசியல் நிகழ்ச்சிகளை அதிகமாக விரும்பமாட்டேன். அதனால் மிகவும் அபூர்வமாகவே வெளியில் பார்ட்டிகளுக்கு செல்வேன். யாரிடமும் அதிகமாக பேசவும் மாட்டேன். கலகலப்பாகவும் இருக்க மாட்டேன். அதனால் தான் எனது திருமணத்திற்கு 40 பேர் மட்டுமே வந்திருந்தனர். எனக்கு உண்மையாக மிகவும் விரிவாக பேசவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில்…