எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்த ‘பத்து தல.’ படத்தில் கலையரசன்!

எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்த ‘பத்து தல.’ படத்தில் கலையரசன்!

எஸ்.டி.ஆர்., கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘பத்து தல.’ தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜாவின் Studio Green நிறுவனம் இப் படத்தினை தயாரிக்கிறது. ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநரான இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் தொடர்ந்து இணைந்து வரும் நடிகர்களால் ரசிகர்களிடத்தில் இப்படம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. நடிகை ப்ரியா பவானி சங்கர்,  டீஜே, மனுஷ்யபுத்திரன் போன்ற மாறுபட்ட நட்சத்திர கூட்டணியில் தற்போது நடிகர் கலையரசனும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா பேசும்போது, “இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் மிகவும் கனமான ‘அமீர்’ எனும் கதாப்பாத்திரத்தில் கலையரசன் நடிக்கவிருக்கிறார். இக்கதாப்பாத்திரம் படத்தில் சிறிதளவு நேரமே வந்தாலும் கதையில் நிறைய அழுத்தம் தரும் பாத்திரமாகும். பிரபல நடிகராகவும், பல திரைப்படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்த அனுபவம் கொண்டவராகவும் இருப்பதால் இவரை நடிக்க…
Read More