22
Mar
பிரமாண்டத்தின் உச்சம் !!! அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டது. இந்தியாவில் வெளியான போஸ்டர்களில் இது உட்ச பட்ச சாதனை ஆகும். தமிழ் ஓடிடி இயங்குதளங்களில் மறுக்கமுடியாத வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ5 நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும் வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது, அஜித் குமாரின் சமீபத்திய ஆக்ஷன் அதிரடி திரைப்படமான ‘வலிமை’ படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிளாக்பஸ்டர் பிரீமியர் காட்சியைக் காணும் நேரம் வந்துவிட்டது. ‘வலிமை’ படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவதை தொடர்ந்து, நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு செய்யும் வகையில் ஜீ5, 10,000 சதுர அடியில் மிகப்பெரிய போஸ்டரை வெளியிட்டது. உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற பிறகு,…