23
Apr
*ஆஹா தமிழில் ஜீவியின் செல்ஃபியை தொடர்ந்து ஐங்கரன் வெளியாகிறது* சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) *சம்பிரதா* என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவிராசு இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. இரண்டு படங்களில் டிரைலர்களை பார்த்த மாணவர்கள் உற்சாகத்தில் உரக்கக் கத்தி,…